.

.

கடிதங்கள்

கடிதங்களாகக் கருதப்படுபவை
சாதாரண தபால்
பதிவுத்தபால்
பெக்ஸ்
தந்தி
கையில் ஒப்படைக்கும் தபால்  (டீல ர்யனெ)
ஈமெயில்
எஸ்எம்எஸ்
தொலைபேசி உரையாடல்கள்

கடிதங்களின் வகைகள்

உள்வரும் கடிதம்
வெளிச்செல்லும் கடிதம்
உள்வரும் கடிதங்களின் வகைகள்
நிறுவனத்தலைவரின் உத்தியோகபூர்வ பெயருக்கு கிடைக்கும் கடிதங்கள் - இவை திறக்கப்பட்டு திகதி முத்திரை இடப்பட வேண்டும்
நிறுவனத்தலைவர் அல்லது ஏனைய உத்தியோகத்தர்களின் சொந்தப் பெயருக்கு வரும் கடிதங்கள் - இவை திறக்கப்படாமல் உரியவருக்கு கொடுக்கப்பட வேண்டும்
பிற நிறுவனங்களுக்கான கடிதங்கள் - இவை திறக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட வேண்டும்
அனுப்பிய கடிதம் திரும்பி வரல் - கடிதஉறையுடன் உரிய கிளைக்கு அனுப்புதல்
அந்தரங்கக்கடிதம்  - திறக்காமல் உரிய அதிகாரியிடம் ஒப்படைத்தல் (உரிய அதிகாரியே திறக்க வேண்டும்)
கடிதம் கிடைத்ததும் செய்ய வேண்டியவை
கடிதத்தை திறந்து மேலே வெறுமையாக உள்ள இடத்தில் எதுவும் மறையாது திகதி முத்திரையிடல்
காசோலை அல்லது காசுக்கட்டளை இருப்பின் உரிய பதிவேடுகளில் பதிதல்
பதிவுத்தபாலாயின் உறையுடன் உரிய பதிவேடுகளில் பதிதல்
அவசரக் கடிதங்களை சாதாரண கடிதங்களில் இருந்து பிரித்து செயற்படுத்தல்
திணைக்களத் தலைவர் பரிசீலித்து குறிப்பு இட்டவுடன் உரிய பதிவுப் புத்தகத்தில் பதிந்து உரிய உத்தியோகத்தர்களுக்கு ஒப்படைத்தல்
வெளிச்செல்லும் கடிதங்களின் வகைகள்
பதில் கடிதங்கள்
தகவல் கேட்கும் கடிதங்கள்
விளக்கமளிக்கும் கடிதங்கள்
பணிப்புரைக் கடிதங்கள்
நிதி ஒதுக்கீடுகள்
வெளிச் செல்லும் கடிதம் அனுப்பும் போது கவனிக்க வேண்டியவை
கடிதத்தின் திகதி, விடயம், இலக்கம், முகவரி என்பன சரியாயிருப்பதை உறுதிப் படுத்தல்
அதிகாரம் பெற்றவரால் ஒப்பமிடப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தல்
மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பின் அவற்றில் சுருக்கொப்பம் இருப்பதை உறுதிப் படுத்தல்
உரிய பதிவேட்டில் பதிதல் (பதிவுத்தபாலுக்கும், சாதாரண தபாலுக்கும் வேறானவை)
நேரில் கையளிக்க வேண்டிய கடிதங்களை பதிவு செய்து உரிய ஊழியர் மூலம் அனுப்புதல்
கடிதத்தில் அனுப்பப் படும் இணைப்புகள் குறித்து கடிதத்தில் குறிப்பிடல்
கடித மாதிரிகள்
உத்தியோகபூர்வ கடிதம் அனுப்பும் பொருட்டு பொது நிர்வாக சுற்றறிக்கை 28ஃ90, 36ஃ90 ஆகியன மூலம் மாதிரிகள் வெளியிடப்பட்டுள்ளன.
பொதுப்படிவம் - 108 கடிதம் கிடைத்தமை பற்றி அறிவிப்பது
பொதுப்படிவம் - 106 கடிதம் கிடைத்தமை பற்றியும் நடவடிக்கையின் பொருட்டு உரிய இடத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ளமை பற்றியும் அறிவிப்பது.
பொதுப்படிவம் - 15
வெளிச் செல்லும் கடிதம் எழுதும் போது கவனிக்க வேண்டியவை
தொடர்பு இலக்கம். எனது இல., உமது இல.
திகதி
உள்முகவரி
விளிப்பு – தகைமை பதவிக்கேற்ப விளித்தல்
தலைப்பு
பதில் கடிதமாயின் வந்த கடித இலக்கம், விடயம் பற்றிய சுருக்கம்
பந்தியாக எழுதுதல் (இலக்கமிடல்)
ஒரு விடயம் மட்டும் இருத்தல்
பதில் எதிர்பார்ப்பாயின் அதைக் குறிப்பிடல்
நன்றி
ஒப்பம், பதவிப்பெயர், றப்பர் முத்திரை
கவனிக்க வேண்டியவை
திணைக்களத்தலைவர் ஒப்பமிட்டாலோ, அவரது கட்டளைப்படி வேறொருவர் ஒப்பமிட்டாலோ திணைக்களத்தலைவரே அதற்குப் பொறுப்பாவார். திணைக்களத் தலைவரின் அனுமதியின்றி வேறொருவர் ஒப்பமிட்டால் அதற்கு அவரே பொறுப்பாவார்.
அந்தரங்கக் கடிதமாயின் இரு உறைகள் பாவித்தல் . குறிப்பிடுதல்
அந்தரங்கக் கடிதத்திற்கு தனியான பதிவுகள். இரகசியமாக வைத்திருத்தல்
முக்கிய கடிதங்கள் யாவும் பதிவுத்தபாலில் அனுப்புதல்
மூன்று நாட்களுக்குள் பதில் அனுப்புதல்
முத்திரைப் பொறி பாவிப்பின் நிறைக்கேற்ப தொகை பதியப்பட்டதை உறுதிப்படுத்தல்

Share on Google Plus

About ACM Mussil

    Blogger Comment
    Facebook Comment

1 comments:

  1. Casino - Dr. Maryland
    Casino. The casino offers a 제주 출장안마 full-service casino and slots 광명 출장안마 machine, table games, and 전주 출장마사지 a sports book. Casino 경상북도 출장샵 Hours: 8 a.m. – 4:00 a.m. Monday through Thursday, 11 a.m. 안동 출장마사지 Sunday through Thursday

    ReplyDelete